25.3 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

இறுதிச் சடங்கில் 20 பேருக்கு அனுமதி!

நாட்டில் மூன்றாவது Mco காலக்கட்டத்தில் முஸ்லிம் அல்லாதோரின் இறுதிச்சடங்கில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
MCO காலத்தில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை தேசிய ஒற்றுமை துறை அமைச்சு அனைத்தையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் தெரிவித்தார்.
வீட்டில் இறுதி சடங்கில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி.
உடலைத் தகனம் செய்ய மயானத்திற்கு செல்ல குடும்ப உறுப்பினர்களின் 20 பேருக்கு அனுமதி. அதேசமயம் ஆற்றங்கரையில் கருமக்கிரியை செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த தளர்வினை மக்கள் முறைப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டத்தோ ஸ்ரீ சரவணன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles