25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அமைதி பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் – அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல்

🔥 Views : 7
👁 Reading Now : 54

ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷியா கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். அதே சமயம், அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என உறுதிபட தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles