25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

4 மாணவர்கள் சித்ரவதை:
-பாலர் பள்ளி ஆசிரியை கைது

மூவாரில் உள்ள தனியார் பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர், தந்னுடைய நான்கு மாணவர்களை சித்ரவதை செய்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்டார். 50 வயதுடைய அந்த ஆசிரியையிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த ஆசிரியை போலீசில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் துணை கமிஷனர் Shahurinain Jais தெரிவித்தார். தமது பிள்ளை துன்புறுத்தப்படும் காணொளி பதிவு ஒன்றை கண்ட தாய் இச்சம்பவம் குறித்து புகார் செய்துள்ளதாக அவர் கூறினார்.

அந்தப் பாலர் பள்ளியில் மூன்று முதல் ஐந்து வயதுடைய மாணவர்களிடம் அந்த ஆசிரியை முரட்டுத்தனமாக நடந்துகொள்வது விசாரணையில் தெரியவந்துள்ளதாவும் அந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக Sultanah Fatimah நிபுணத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் Shahurinain Jais தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles