30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடர்:
அரசுக்கு எதிராக பொதுமக்கள் சட்ட நடவடிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 39

கடந்த ஆண்டில் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப் பேரிடரின்போது, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கையை எடுக்கத தவறிய அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுமக்கள் ஆலோசித்து வருவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு தெரிவித்தார்.

‘கிள்ளான் போன்ற கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்தும் கருத்து பரிமாறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசுக்கு பொறுப்பு உள்ளது. இந்த நிலையில், வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட முதல் மூன்று-நான்கு நாட்களில் அரசாங்க அதிகாரிகளை சம்பவ இடத்தில் காணவில்லை என்றும் உணவு விநியோகம் மற்றும் மீட்புப் நடவடிக்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொண்டனர் என்றும் அந்த ஜசெக தலைவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles