30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மேம்பாலத்திலிருந்து கொள்கலன் கீழே சென்ற லோரியில் விழுந்தது

🔥 Views : 6
👁 Reading Now : 46

SKVE நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதிக்கு
அருகேயுள்ள மேம்பாலத்திலிருந்து ஒரு கொள்கலன் கீழே சென்று கொண்டிருந்த லோரி மீது விழுந்தது. மறு சுழற்சிக்கான அட்டைப் பெட்டிகளை பூலாவ் இன்டாவுக்கு கொண்டுச் சென்ற அந்த கொள்கலன் 12 மீட்டர் உயரத்திலிருந்து தரையில் சென்று கொண்டிருந்த லோரியின் பின்புறத்தில் விழுந்து பின்னர் அந்த லோரியின் முன்புற பகுதியில் சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 49 வயதுடைய லோரி ஓட்டுனர் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து பூலாவ் இன்டாவுக்கு செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கையுறைகளை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுனர் லோரியில் சிக்கிக்கொண்டு காயத்திற்கு உள்ளானார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles