
இன்று காலை 11 முதல் 1 மணி வரை ம.இ.கா தலைமையகத்தில் ம.இ.கா தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இதில், தலைவர் பதவிக்குப் போட்டி ஏதும் இல்லாத நிலையில், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் மாலை அணிவித்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.



