34 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

சிறைக்கு சென்ற Sam Ke Ting-கிற்கு ஆதரவாக
இணையத்தில் கையெழுத்து வேட்டை

🔥 Views : 13
👁 Reading Now : 41

8 இளைஞர்களை மோதி மரணத்தை விளைவித்ததற்காக, 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட Sam Ke Ting-கை விடுவிக்கக் கோரி, இணையத்தில் ஆதரவு மனுக்கள் திறக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2 முறை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த 27 வயதான அந்த பெண்ணை நேற்று ஜோகூர் பாரு நீதிமன்றம் நேரடியாக சிறைக்கு அனுப்பியது.

இவ்வேளையில், உயிழப்புகளை உட்படுத்திய விபத்தினை யாரும் எதிர்பார்க்காதது. அதனால் ஏற்பட்ட இழப்பும் பெரிதாகும். ஆனால் அவ்விவகாரத்தில் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டுமெனக் கோரி, நான்கு இணைய மனுக்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட விபத்து அதிகாலை வேளையில் வெளிச்சம் இல்லாத சாலையில் சிறார்கள் மிதி வண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles