
மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 10 தமிழ் குடும்பங்களுக்கு மலேசிய மக்கள் மன்றத்தின் சார்பில் உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
மலேசியா மக்கள் மன்றத்தின் தலைவர் டாக்டர் பாஸ்கரன், ஜே கே எஸ், பாதுகாவலர் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணா, கமல் சுப்பிரமணியம், சூர்யா, உச்சசௌந்தரராஜன் ஆகியோர் தலைமையில் 10 தமிழ் குடும்பங்களுக்கு இந்த உணவுகள் வழங்கப்பட்டன.
கோலாலம்பூர் கெப்போங்கில் வாழ்ந்து வரும் இவர்கள் நோய்த்தொற்று தாக்கத்தினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களின் துயரத்தை அறிந்து உதவி செய்திருப்பதாக டாக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.
