34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கோவிட்-19 பரிசோதனையில் சிறுவர்கள் அதிகளவில் பங்கேற்பு

🔥 Views : 9
👁 Reading Now : 52

சிலாங்கூர் மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் 40 விழுக்காடு சிறார்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் பிள்ளைகளின் உடல் நலம் மீது பெற்றோர்கள் கொண்டுள்ள அக்கறையை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் சந்தை மற்றும் தொடர்பு பிரிவு அதிகாரி நோராபிடா ஜம்ரி கூறினார்.

இலவச மருத்துவ பரிசோதனைக்கு சிறார்களுடன் வரும் பெற்றோர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதாக அவர் கூறினார்.

சிறார்கள் நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் அபாயம் அதிகம் கொண்டவர்களாக உள்ளதால் அவர்களை இத்தகைய பரிசோதனைக்கு பெற்றோர்கள் கொண்டு வருவதை தாங்கள் ஊக்குவிப்பதாகவும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles