
இந்திய சமுதாயம், தமிழ்ப்பள்ளி உட்பட ஆலய விவகாரம் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஒரு போதும் அஞ்சி ஓட மாட்டேன் என்று காராக் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் சவால் விடுத்துள்ளார்.
நாட்டில் புகழ் பெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலயம் நிர்வாகம் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் ஆலய ஒழுங்கு நடவடிக்கை குழு என்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது .
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது என்னை உட்பட பலரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து நான் குரல் கொடுத்தேன்.

இதற்காக என்னை நீக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன். அன்றும் சரி இன்றும் சரி அநியாயத்தை எதிர்த்து நான் போராடுவேன். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். யாருக்கும் அஞ்ச மாட்டேன்.
ஆலயத்தில் நடக்கும் அநியாயத்தை எதிர்த்து துணிந்து குரல் கொடுப்பேன் என்று அவர் சூளுரைத்தார்.
