28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ரமலான் சந்தைகளில் உணவு மாசுபாடு குறித்து ஆய்வு:
-சுகாதார அமைச்சு நடவடிக்கை

🔥 Views : 12
👁 Reading Now : 41

ரமலான் சந்தைகளில் விற்கப்படும் உணவு பண்டங்களின் தரக்குறைவு அல்லது மாசுபாடு குறித்த புகார்களைப் பெற்றால், அதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தரமேம்பாட்டுப் பிரிவுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

மக்களின் ஆரோக்கியம் முக்கியம் என்பதால், இந்த விவகாரம் தொடர்பில் புகார்கள் எழுந்தால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமலாக்கப் பிரிவினரை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரமலான் சந்தைகளில் வாங்கும் உணவில் மாசுபாடு இருப்பது தெரியவந்தால் அதுகுறித்து பயனீட்டாளர்கள் உடனே புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles