28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ஹஜ் பெருநாளுக்கு முன் தேர்தல் நடந்தால்
அம்னோ சொல்லி அடிக்குமாம்

🔥 Views : 9
👁 Reading Now : 23

ஜூலை 10-ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கும் ஹஜ் பெருநாளுக்குள் நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றால், அம்னோ தன் ஆட்சி அதிகாரத்தை பழையபடி நிலைநிறுத்திக் கொள்ளும் என்று அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் ஒருசிலர் அம்னோவை உசுப்பி விடுகின்றனர்.

ஜூலை 31-இல் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி அரசுக்கும் எதிரணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்று பெறுவதால், அதற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் போக்கில் மாற்றம் ஏற்படும்.

தவிர, அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு தேசிய அளவில் தற்போது காணப்படும் ஆதரவு நிலையில், இந்த ஆண்டின் நிறைவுக் கட்டத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், குறைந்தபட்சம் ஆகஸ்ட் மாதத்திற்குள் அடுத்தப் பொதுத் தேர்தலை நடத்துவது அம்னோவிற்கு சாதகம் என்றும் காலம் கடத்த கடத்த பாதகம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles