28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பெஜுவாங் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்
பல இனக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமாம்

🔥 Views : 6
👁 Reading Now : 51

‘வைப்புத் தொகை இழப்பு புகழ்’ பெஜுவாங் கட்சி, 15-ஆவது பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் பல இன கட்சிகளுடன் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க விரும்புவதாகவும் அந்தக் கூட்டணி ஊழலுக்கு எதிராக போராடும் என்றும் துன் மகாதீர் தெரிவிக்கிறார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் மண்ணைக் கௌவ்விய இவர், ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்த இவர், 15-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது என்பது நகைச்சுவையின் உச்சம்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலாவது பெஜுவாங் வெல்வது ஒருபுறம் இருக்கட்டும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை அடியோடு சீர்குலைத்த இவர் தலைமை வகிக்கும் பெஜுவாங் கட்சி முதலில் வைப்புத் தொகையை தற்காக்குமா என்பதே கேள்விக்குறையாக இருக்கும் நிலையில், ஆட்சி அமைப்பதைப் பற்றி கனவு காண்பது விநோதம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles