
மனநல பாதிப்புக்கு ஆளான நாகேந்திரன் கே.தருமலிங்கம் ஹெரோயின் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கி, தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ள நிலையில், அவரை அதிலிருந்து மீட்பதற்காக பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சட்ட முன்னெடுப்புகள் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில், நாகேந்திரனுக்கு அடுத்த வாரம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் அரசின் இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனும் கண்டித்துள்ளனர்.
மலேசியரான நாகேந்திரனின் வழக்கறிஞர் எம்.ரவி, இந்த விவகாரத்தை மலேசிய அரசு, பன்னாட்டு நீதிமன்றத்துக்கு கொண்டுச்சென்று நாகேந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரி உள்ளார்.



