
சமூகத்தில் எத்தனை மாற்றம் நிகழ்ந்தாலும் அறிவியல் சிந்தனை மலர்ந்தாலும் எச்ஐவி பாதிப்புக்கு ஆளானவர்களைப் பற்றிய பார்வையும் அவர்களை புறக்கணிக்கும் போக்கும் இன்னும் மாறவில்லை.
கடந்த ஈராண்டுகளாக கொரோனா பெருந்தாக்கத்தினால், இந்த நிலை இன்னும் மோசமானது. எச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறவும் மருத்துவ நிலையங்களை இயல்பாக நாடவும் முடியாத நிலை அண்மையில் நிலவியது.
பால்வினை நோய் சம்பந்தப்பட்ட இந்தக் கிருமியின் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உடல் நல சிகிச்சியைவிட மனநல மருத்துவமே மிகவும் அவசியம்; குறிப்பாக, குடும்ப அளவிலும் சமூக அளவிலும் இவர்களுக்கு அரவணைப்பு தேவை என்பதை மலேசிய மக்கள் உணர வேண்டும்.



