33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தப்பிஓட ஒத்துழைக்காததால் தாக்கப்பட்டேன்:
UNHCR அட்டை வைத்திருக்கும் ரொஹிங்கிய அகதி

🔥 Views : 5
👁 Reading Now : 52

பினாங்கு சுங்கை பாக்காப் குடிநுழைவு தடுப்பு முகாமில் இருந்து தப்பியோட திட்டமிட்டவர்களுடன் ஒத்துழைக்காததால் சக ரொஹிங்கிய அகதிகளால் தாக்கப்பட்டதாக பிடிபட்ட ஓர் அகதி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏதும் இன்றி, வெறும் கைகளைக் கொண்டு வாயில் கதவை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயன்றவர்கள் பெரும்பாலும் ஐநா அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டையைக் கொண்டிராதவர்கள்.

தப்பி ஓடிய 528 பேரில் 385 அகதிகள் மீண்டும் பிடிபட்டனர். அவர்களில் ஒருவரான இந்த அகதி, இந்த தப்பி ஓடும் திட்டம் எப்படி திட்டமிடப்பட்டது என்பது குறித்து குடிநுழைவுத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தபின், மீண்டும் சுங்கை பாக்காப் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles