33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இலங்கையை அடுத்து நேப்பாளத்திலும்
கடும் பொருளாதார நெருக்கடி:

🔥 Views : 6
👁 Reading Now : 51

ஆசியாவில் சின்னஞ்சிறு நாடுகள் அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து பன்னாட்டு சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்குவதற்குள் உலகின் ஒரே இந்து நாடு சொல்லப்படும் நேப்பாளமும் தற்பொழுது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

2.9 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் அந்த இமயமலை அடிவாரத்து குளிர்ப்பிரதேச நாட்டில், அந்நிய செலாவணிக் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

பொதுவாக, உலகம் முழுவதும் வலதுசாரி போக்கு எனப்படும் மத-இன அரசியல் போக்கு தலையெடுத்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைக்கும் தங்களின் பதவியை தற்காக்கவுமே அதிக முனைப்பு காட்டுகின்றனரேத் தவிர, சொந்த மக்களின் நலனிலும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பிலும் கோட்டை விடுவதைக் காணமுடிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles