26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

தோழியைப் போன்று நடித்த பெண்ணிடம்
ஏமாந்த அரசியல் செயலாளர்

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் செயலாளர், தோழியைப் போன்று நடித்து ஏமாற்றிய பெண்ணிடம் வெ.3,000-ஐ இழந்துள்ளார்.

50 வயதுடைய அந்த அரசியல் செயலாளர், தனக்கு தெரியாத தொலைப்பேசி எண் மூலம், பெண் ஒருவரிடமிருந்து அழைப்பை பெற்றுள்ளார். அந்ப்த பெண் தனது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கைபேசியும் பணப் பையும் திருடப்பட்டதாகக் கூறி, தனக்கு உடனடியாக 3,000 வெள்ளியை வங்கி கணக்கில் சேர்த்து உதவும்படியும் கேட்டிருக்கிறார்.

மறுமுனையில் யார் பேசுவது என அந்த அரசியல் செயலாளர் கேட்டபோது, ‘தான் யார் என கண்டுபிடிக்குமாறு’ அந்தப் பெண் கூறியுள்ளார். அரசியல் செயலாளரும் தன் தோழியின் பெயரைச் சொல்லவே, அது நான்தான் என அப்பெண் கூறியுள்ளார். அதை நம்பி அப்பெண் கேட்ட பணத்தை அனுப்பிய பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அந்த அரசியல் செயலாளர் உணர்ந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles