33.5 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

சபாவில் தீவிபத்து:
-900 பேர் வீடுகளை இழந்தனர்

🔥 Views : 11
👁 Reading Now : 64

Sabah, Kampung Bangau-Bangau-வில் நிகழ்ந்த தீ விபத்தில் 100 வீடுகள் அழிந்தன. இதனால் அந்த வீடுகளில் தங்கிருந்த ஏறக்குறைய 900 பேர் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் விரைந்து ஈடுபட்டதால் அதிக வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

கடந்த 2017-இல் Kampung Bangau-Bangau நீர்ப் பகுதியில் இருந்த வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக கட்டப்பட்ட வீடுகளில்தான் நேற்றிரவு தீ பற்றியது.

எனினும் இவ்விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென Semporna தீயணைப்பு நிலையத்தின் தலைவர் Edoen Macheal தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles