
ஜெலுதோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நாற்காலியில் இடது கால் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
மாலை 5.40 மணியளவில் குடியிருப்பாளர்கள் அந்த வாகன நிறுத்துமிடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த ஆடவரின் சடலத்தைக் கண்டவுடன் போலீஸ் தரப்பைத் தொடர்பு கொண்டு புகாரளித்ததாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
52 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவருடன் இருந்த அந்த இந்தோனேசிய நபர், மலாக்காவில் இருந்து வந்ததாகவும் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதியில் இருந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாகவும் தொடக்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
