26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பாஸ் – அம்னோ உறவு:
ஒட்ட முடியாத அளவுக்கு வெட்டுப்பட்டுள்ளது

கூட்டணி அரசியல் எதுவாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் நஜீப் காலத்தில் கள்ள உறவு ஏற்பட்டது; இந்த நேரத்தில்தான் பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் வெ2.5 மில்லியன் வெள்ளி செலுத்தப்பட்டது. இதுகுறித்து பாஸ் கட்சி கடைசிவரை விளக்கம் அளிக்கவில்லை.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும், பாஸ்-அம்னோ இடையிலான கள்ள உறவு நல்ல உறவாக மலர்ந்தது; டான்ஸ்ரீ முகைதீன் யாசினை பிரதமர் பதவியில் இருந்து அம்னோ நீக்கியபோது, இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், அம்னோ தலைவர்களை வீழ்த்துவதற்கான சதியில் பாஸ் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அம்னோ சார்பில் அண்மையில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது முதல் அம்னோ-பாஸ் உறவு ஒட்ட முடியாத அளவுக்கு சென்றுவிட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles