26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

10 வயது மகனின் உடலை தோளில் சுமந்து
90 கி.மீ. மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஷ்வா என்னும் 10 வயது சிறுவன், இரைப்பை மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோஷ்வா நேற்றைய முன்தினம் உயிரிழந்தார்.

மகனின் உடலை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் கேட்டதால், ஜோஷ்வாவின் தந்தை, இலவச அமரர் ஊர்திச் சேவையை நாடினர்.

அதன்படி உதவிசெய்ய முன்வந்த இலவச அமரர் ஊர்தி சேவையினரை, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், உறவினரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, மகனின் சடலத்தை தோளில் சாய்த்துக்கொண்டு 90 கி.மீ தூரம் பயணம் செய்த கொடுமை நடந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles