30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ் மே தின வாழ்த்துச் செய்தி

மேலான தொழிலாளர் உழைப்பால் நாடு மேன்மை பெற்று உயர்ந்துள்ளது. மண் வளமும் வளப்பமும் நிறைந்த பொன் விளையும் பூமியென பலரும் பாராட்டும் வண்ணம் உலக அரங்கில் பவனி வந்து கொண்டிருக்கும் நம் நாடு மலேசியா அன்று ஏழைத் தொழிலாளர்கள் ஆற்றிய மேலான உழைப்பாலும் தியாக அர்ப்பணிப்பு உணர்வாலும் மேன்மை பெற்று உயர்ந்த நிலையில் இன்றளவும் பயணித்து வருகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ் தமது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.


அடர்ந்த காட்டை யழித்து சமப் படுத்தி ரப்பர் மரக் கன்றுகளை நட்டு இந்த நாட்டின் செழுமைக்கும் செல்வச் செழிப்புக்கும் முதுகெலும்பாக இருந்து பாடுபட்ட உழைப்பாளர் வர்க்கத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் மேதின கொண்டாட்டங்கள் அன்று தோட்டங்கள் தோறும் பெரும் விழாக்கள் போன்று கொண்டாடப்பட்டன.
மேதின விழாவில் தோட்டப் புற இளைஞர்கள் பங்கு பெற கபடி கால்பந்து கயிறு இழுத்தல் வழுக்கு மரம் ஏறுதல் பெண்களுக்கான இசை நாற்காலி ப் போட்டி மற்றும் தோட்டத்துப் பிள்ளைகள் பங்கு பெற சாக்கோட்டம் கண் கட்டி ப் பொருளைக் கண்டுப் பிடித்தல் மாவில் மறைத்து வைத்த நாணயத்தைத் தேடிப் பிடித்தல் போன்ற வீர தீர விளையாட்டு கள் பாட்டாளி மக்கள் பட்ட துன்பங்களையும் மறக்கச் செய்துள்ளது. அந்த நிகழ்வுகள் அவர்கள் மனதில் ஏற்படுத்திய உற்சாகமும் பரவசமும் இன்றளவும் நம் நினைவில் வட்டமடித்து நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
மேம்பாட்டு த் திட்டத்தில் நாட்டில் எத்தனை யோ தோட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொலைந்து போயின. எனினும் இந்தியப் பாட்டாளி கள் அன்று வியர்வை சிந்தி ய உழைப்பால் இன்று உலக வரலாற்றில் உன்னத இடத்தில் உயர்ந்துள்ளது இந்த நாடு என்றால் அது மிகையில்லை.அதன் கடந்த கால வரலாற்றை யாரும் புதிதாக இன்று மாற்றி எழுதிட முடியாது.


கால மாற்றத்தினால் ஏற்றத்தில் நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேறி வரும் இந்த நாளில் தோட்டப் புற ங்களில் வாழ்ந்து மறைந்த தொழிலாளர்கள் நடத்திக் காட்டிய அன்றைய மேதின கொண்டாட்ங்களை இன்று மேதினத்தில் அவற்றை நாம் மீண்டும் நினைவு கூர்ந்து ப் பார்த்து ப் பெருமை கொள்வதில் நம் மனம் நிறைவு கொள்கிறது என்று மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles