
நோன்புத் திருநாளுக்குப் பின் நாட்டில் கோவிட் தொற்று அதிகரிக்கலாம் என்று ஐயுறுவதாக சுகாதாரத் துறை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இது முதல், இரண்டாம் கட்டத் தொற்றாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ள ஹிஷாம், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுதான் கோவிட்-19 தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரே வழி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
