29.5 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

காராக் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில்
வாகனத்தை ஓட்டிய ஆடவர் போலீஸ் பிடியில்

🔥 Views : 18
👁 Reading Now : 32

பெருநாள் பரபரப்பும் இன்பத் திளைப்பும் மனதைப் பற்றிக் கொண்டிருந்-தாலும் வாகன நெரிசலில் அகப்பட்டுக் கொண்டால், மனம் படாதபாடு படும்.

மக்கள் இந்த நிலைக்கு ஆட்பட்டிருந்த நிலையில், 43 வயது ஆடவர் வெள்ளை நிற Toyota Alphard வாகனத்தை மிகவும் ஆபத்தமான முறையில் செலுத்தியதை அறிந்த காவல் துறையினர் அவரை வளைத்து சிறுநீர் பரிசோதனைக்கு ஆட்படுத்தினர்.

அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியான நிலையில், இரத்தப் பரிசோதனைக்காக, செலாயாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடவர் 1987 போக்குவரத்துச் சட்டம் 42-ஆவது பிரிவு, துணைப் பிரிவு (1)-இன்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் Zainal Mohamed Mohamed தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles