
மின் அஞ்சல் மூலம் வெ.39 லட்சம் மோசடியில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 43 வயது நைஜீரிய ஆடவரும் அவனது 41 வயது மலேசிய மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
BEC எனப்படும் Business email compromise மோசடித் திட்டத்தில் அந்தத் தம்பதியினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத் துறை ஆணையர் டத்தோ Mohd Kamarudin Md Din தெரிவித்தார்.
இணையவழி மோசடியில் ஈடுபடும் அந்த தம்பதியர் குறித்து துபாயைச் சேர்ந்த வர்த்தகரிடமிருந்து ஜூன் 8 ஆம் தேதி போலீஸ் புகார் பெற்றதாக அவர் கூறினார். அமெரிக்காவை தளமாக கொண்ட அவரது நிறுவனம் 41,000 மெட்ரிக் டன் சிமெண்ட்டை கொள்முதல் செய்வதில் சம்பந்தப்பட்டிருந்தது. அமெரிக்க நிறுவனத்தின் மின்னஞ்சலில் ஊடுருவிய அந்த இருவரும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலேசிய வங்கிக்கு 39 லட்சம் ரிங்கிட்டை பரிமாற்றும்படி கேட்டுக்கொண்டதாக இன்று வர்த்தக குற்றவியல் விசாரணைத் துறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Mohd Kamaruddin கூறினார்.
