26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

தோட்டங்களில் ட்ரோன் பயன்பாடு:
சுரைடாவின் அறியாமையைக் காட்டுகிறது

🔥 Views : 16
👁 Reading Now : 23

ட்ரோன் இயந்திரம், வானவிதியில் எதையும் மேலோட்டமாகத் தெளிக்கப் பயன்படுமேத் தவிர, தாவரத்தின் தண்டு, இலை, ஓலை என தரம் பார்த்து இடம் பார்த்து பூச்சிக் கொல்லி மருந்தையும் உரைக் கரைசலை வேரிலும் அடிக்க பயன் தராது என்பதை மூலப் பொருள் தோட்டத் தொழில் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் அவதானிக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி சாடியுள்ளார்.

தோட்டத் தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டுமெனும் சுரைடாவின் கூற்று , அவர் தோட்டத்தொழில்துறையின் நடைமுறைகளை அறிந்து வைத்திருக்கவில்லை என்பதையே காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்நிய தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக செம்பனை தோட்டங்களில், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் , களைக் கொல்லி மருந்தை தெளிக்கவும் டிரோன்களைப் பயன்படுத்தலாமென சுராய்டா பரிந்துரைத்திருந்தார். ஆனால், அவ்வாறு செய்வதின் மூலம் நிருவாக-உற்பத்தி செலவு அதிகரிக்குமென Perai சட்டமன்ற உறுப்பினருமான ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles