31.3 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

‘செந்தூர்’ எக்ஸ்பிரஸ் ஜூன் 16ந் தேதி வரை ரத்து

🔥 Views : 30
👁 Reading Now : 65

கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ரெயில் போக்குவரத்து நடைபெற்றாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூடும் இல்லாததால் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இயக்கப்படும் சில ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரெயில்களின் சேவை மே மாத இறுதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த ரெயில்களின் சேவை ரத்து ஜுன் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே 31 -ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06105) ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் ஜூன் 16 -ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மே 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles