31.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

நான் பிரதமரானால் டைம் ஸைனுடின் தூங்கவே முடியாது

🔥 Views : 17
👁 Reading Now : 65

தாம் பிரதமராகும் பட்சத்தில் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின் இனி தூங்கவே முடியாது என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு வயதாகி விட்டதால் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அன்வார், அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பது தமக்கு நன்கு தெரியும் என்று சுட்டிக்காட்டினார்.
அண்மையில் கூட பண்டோரா பேப்பரர்ஸில், வெளிநாட்டில் சட்டவிரோதமாகப் பணத்தை வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியலில் டைம் ஸைனுடின் பெயரும் இருப்பதை அவர் மறந்து விடக்கூடாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
ஆக, தாம் இந்த விவகாரத்தை எழுப்பாமல் இருக்க மாட்டேன் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்காது. நான் பிரதமரானால் டைம் ஸைனுடினுக்கு தூக்கம் வராமல் செய்வேன் என்று அவர் சூளுரைத்தார்.
நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் இன்னமும் சுதந்திரமாக சுற்றித் திரிவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதிர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles