31.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

அகன்ற கூட்டணி சித்தாந்தம் பக்காத்தானுக்கு அவசியமில்லை

🔥 Views : 23
👁 Reading Now : 36

அகன்ற கூட்டணி என்ற சித்தாந்தம் பக்காத்தான் கூட்டணிக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என்றும் அது தற்போது அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான முவாஃபக்காட் நேஷனலின் கதிதான் இதற்கும் நேரும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பக்காத்தான் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளோடு கூட்டு சேரக் கூடாதென்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக யாருடனும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனித்துவமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளையே நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles