31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஜோ பைடனை எச்சரித்த ஜின்பிங்

🔥 Views : 8
👁 Reading Now : 41

அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது. இதனால் சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இதையும் படியுங்கள்: ஈராக் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய மக்கள் இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என சீன எச்சரித்தது. இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதையும் படியுங்கள்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று அதோடு வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்து பேசுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் முக்கியத்துவம் பெற்றதாகவும், தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜோ பைடனை ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தைவான் விவகாரம் குறித்து ஜோ பைடனிடம் ஜின்பிங் கூறியதாவது:- சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு குறுக்கீட்டையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன். இவ்வாறு ஜின்பிங் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles