
பி40 பிரிவு மக்களுக்கு உதவிநிதி இன்னமும் தேவைப்படுவதாகவும் அது தேவைப்படுவோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்பி வலியுறுத்தியுள்ளார். ஆயினும், செலவழிக்கப்பட்ட வருமானத்தை ஒட்டு தேவைப்படுவோருக்கு உதவிநிதி அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். சம்பளத்திலிருந்து வருமான வரி, ஸக்காட், ஊழியர் சேம நிதி போன்ற கட்டணங்களைச் செலுத்திய பின்னர் மீதமிருக்கும் பணமே செலவழிக்கப்பட்ட வருமானம் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையில், உதவிநிதி அளிக்கப்பட்டாலும், அதிலும் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர் வீரசேனா தெரிவித்தார்.



