
கோவிட் -19 நோய்த் தொற்றால் மரணம் அடைவோர் உடல்களை தகனம் செய்ய 9,000 வெள்ளி வாங்கப்படுவதுக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று சுங்கை பூலோ பெரிய மருத்துவமனை காஸ்கெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 2,500 முதல் 3,000 வெள்ளி மட்டுமே வசூல் செய்கிறோம். வசதி படைத்தவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பெட்டிகளை வாங்கி இறுதிச் சடங்கு செய்கிறார்கள். நோய்த் தொற்றால் மரணம் அடைந்த பலரின் உடல்களை நாங்கள் இலவசமாக தகனம் செய்திருக்கிறோம். உண்மை எது என்று தெரியாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.
