25.5 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

தோல்வியுற்ற அரசாங்கத்தால் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி!

🔥 Views : 26
👁 Reading Now : 66

கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக கோவிட் -19 தாக்கத்திலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கம்,நாட்டின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சியை கொண்டிருப்பதோடு தோல்வியையும் அடைந்துள்ளது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு கூறினார்.நாட்டின் மேம்பாட்டிற்கும்,பொருளாதாரத்திற்கும் சுற்றுலாத்துறை எவ்வளவு பங்களிப்பை வழங்குகிறது என்றார்.இன்று நாட்டில் கோவிட் -19 தொற்று 8 ஆயிரத்தை தொட்டுள்ளது.அதனை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் அணைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்திருப்பதோடு,பெரும் பணமும் செலவழிக்கப்பட்டுள்ளது என சொன்னார்.மேலும் இந்த நான்கு வார நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்குப் பிறகு சுற்றுலாத்துறை என்னவாகும்?அதனை மீட்சிப் பெற வைப்பதற்கு தேசியக் கூட்டணி அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.இந்த சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற புதிய திட்டங்களையும் மேற்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரா மாநில ஜசெக துணைத் தலைவருமான சிவகுமார் வரதராஜு கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles