
நடைமுறையில் இருந்து வந்த யுபிஎஸ்ஆர், பிடி3 ஆகிய தேர்வுகளைக் கல்வி அமைச்சு ரத்து செய்து பிபிடி எனும் வகுப்பறையில் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் புதிய முறை மாணவகளைச் சோம்பேறிகளாக்கும் என்றும் அவர்கள் எந்தவொரு குறிக்கோளும், நோக்கமும் இல்லாது கல்வியைத் தொடர வைக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வியில் போட்டித் தன்மை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவர்கள் அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, மேல்நிலைக்குச் செல்ல தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.



