25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

காவல் கைதி மரணங்கள் விசாரணை நடத்துக!

🔥 Views : 5
👁 Reading Now : 55

காவல் கைதி மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்படி மலேசிய போலீஸ் படைக்கு உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இனியும் காவல் கைதிகள் மாற்றமடையும் சம்பவம் இடம் பெறக்கூடாது. மேலும் காவல் கைதிகள் மரணம் தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. காவல் கைதிகள் மரணம் தொடர்பில் விசாரணைகள் நியாயமாக நடத்தப்படும்.
நாங்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
ஒரே மாதத்தில் மூன்று காவல் கைதிகளான கணபதி, சிவபாலன், சுரேந்திரன் ஆகியோர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை நடத்த கோரி நேற்று முன்தினம்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா மற்றும் டெம்பளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சாரி ஆகியோர் உள்துறை அமைச்சகம் மகஜரை சமர்ப்பித்தனர் இந்த மதுரை பெற்றுக்கொள்ள எந்த அதிகாரியும் வராத பட்சத்தில் அவர்கள் நுழைவாயில் மகஜரை வைத்து விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

1 COMMENT

  1. சுடச்சுட செய்திகள் கொடுக்கும் ஏஎஸ்டிக்கு என் பாராட்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles