28.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

நஜிப்பை என்றும் தற்காப்போம்

🔥 Views : 5
👁 Reading Now : 65

எஸ்ஆர்சி நிதி முறைகேடு வழக்கில் நஜிப் ரசாக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும் அவரோடுதான் அம்னோ தலைவர்களும் அடிமட்டத் தொண்டர்களும் அணி வகுப்பார்கள் என்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பினால் உறுப்பினர்கள் துவண்டு போயினும், அவரைத் தற்காப்பதிலிருந்து ஓயப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.
நல்லதோ, கெட்டதோ அவரின் வழிகாட்டுதல்தான் எங்களுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்ததாக நஜிப்பிற்கு 2020இல் உயர்நீதிமன்றம் 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்தது.
அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட முறையீட்டை 2021 டிசம்பரில் மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles