
எஸ்ஆர்சி நிதி முறைகேட்டு வழக்கில் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்சியாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் மாட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என அவர் புகழாரம் சூட்டினார்.
இது சம்பந்தமாக உயர்நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றங்களின் தீர்ப்பனை நாட்டு மக்கள் அனைவரும் மதிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தத் தீர்ப்பினை வழக்கிய துணிச்சல் மிக்க நீதிபதிகள் நமது பாராட்டுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்



