
எஸ்ஆர்சி நிதி முறைகேடு வழக்கில் நீதித் துறை தமக்கு எதிராகச் செயல்பட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றம் சாட்டினார்.
நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நின்று அறிக்கை ஒன்றை வாசித்த நஜிப், இந்த வழக்கில் வழக்கறிஞர் விலகுதைத் தடுத்து வழக்கை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது இதுதான் முதன்முறை என அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்கின் ஆயிரக் கணக்கான ஆவணங்களைப் படித்துப் புரிந்து கொள்ள, வழக்கை 4 மாதங்கள் ஒத்திவைக்க நீதிமன்றம் விடாப்பிடியாக மறுத்தது.
நான் மோசமாக நடத்தப்பட்டேன். எனக்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை. வலிமைமிக்க நீதிமன்றம் என்னை திட்டமிட்டே வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.



