
எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக்கை குறுக்கு வழியில் தப்பிக்க வைக்க அவரின் தரப்பு பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது கண்கூடாகத் தெரிந்தது.
தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டை வழக்கை நடத்துவதிலிருந்து விலக வைக்க, அவர் தாமாக விலக வேண்டுமென்ற மனு நஜிப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அது பற்றிக் குறிப்பிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ வி.சிதம்பரம், இது நீதிமன்றம், சர்க்கஸ் கூடாரமில்லை என்று தாக்குதல் கொடுத்தார்.
வழக்கிலிருந்து அகற்றப்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபியைக் கொண்டுவந்து, வழக்கை 24 மணி நேரம் ஒத்தி வைக்கக் கேட்டுக் கொண்டனர். அது நிராகரிக்கப்பட்ட பின்னர், Fairoz Husein Ahmad Jamaludin (ஃபிரோஸ் உசேன் அமாட் ஜமாலுடின்) என்ற வழக்கறிஞரைக் கொண்டு வந்தனர். அதனையும் நீதிமன்றம் நிராகரித்தது.
பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அவர் வழக்கறிஞர்களின் பகுதிக்கு வந்து வழக்கை நடத்தப் போவதாக அடம்பிடித்த அவரைப் பார்த்து சிதம்பரம், இது சர்க்கஸ் கூடாரம் இல்லையென்று உரக்கக் கூறினார்.



