
நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் ஏ.எம்.ராஜா புகழ் அந்தோணியின் வசந்த கால ராகங்கள் என்ற கலைவிழா அண்மையில் சோமா அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், டாக்டர் பி.எஸ். பிள்ளை, டத்தோ டாக்டர் முத்து ரத்தினம், சோலை பாஸ்கரன், டத்தோ கோபாலகிருஷ்ணன், டத்தோ ஹரிகிருஷ்ணன், பிரபல வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




