
முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி தமது பதவியின் கடமையிலிருந்து தவறியதாக துன் மகாதீர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அவர் பதவியில் இருந்தபோது, நாட்டுக்காகப் பாடுபடாமல் நஜிப்பை குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வைக்கவே முறை தவறிய காரியங்களில் ஈடுப்ட்டதாக மகாதீர் தெரிவித்தார்.
1எம்டிபி நிதி முறைகேட்டில் நஜிப் குற்றவாளி என்று உலகமே கூறியபோது, அவர் குற்றம் செய்யவில்லை என்று கூறி அவரைத் தப்பிக்கவிட்ட பின்னர், உயர்நீதிமன்றம் நஜிப்பிற்கு 12 ஆண்டு சிறையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்து அபாண்டியின் முகத்திரையைக் கிழித்தது.
கடமையைச் செய்யத் தவறிய அவரைத் தாம் பதவியிலிருந்து தூக்கி எறிந்ததாகவும் ஆனால் இப்போதைய அரசு அதற்காக அவருக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கியது வெட்கக்கேடு என்று மகாதீர் குறிப்பிட்டார்,



