26.4 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

சீனர்களையும் இந்தியர்களையும் பெண்டாத்தாங் என்று கூறியது பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது -பினாங்கு துணை முதலவர் டாக்டர் ராமசாமி

🔥 Views : 18
👁 Reading Now : 55

கோத்தா பாருவில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய சர்ச்சைக்குரிய மத போதகர் Zakir Naik (ஸாக்கிர் நாய்க்), இந்தியர்களையும் சீனர்களையும் பெண்டாத்தாங் (வந்தேறிகள்) என்று கூறி அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென்று கூறியது பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதாகப் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஸாக்கிர் நாய்க் ராமசாமியின் மீது தொடுத்திருந்த மானநட்ட வழக்கில் சாட்சியம் அளித்த அவர், நாட்டில் உள்ள சீனர்களும் இந்தியர்களும் நாட்டின்பால் விசுவாசம் காட்டாமல் இருப்பதால் அவர்கள் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியில்லை என்று குறிபிட்டதாகத் தெரிவித்தார். அவரைப் பற்றிய ஒரு பேட்டியில் தாம், இந்த விவகாரத்தைச் பேச ஸாக்கிருக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் நபர். இன, மத வாதத்தைத் தூண்டி இங்கு கவலரத்தை உருவாக்க அவர் முனைவதாகவும், அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டதாக ராமசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles