
எஸ்ஆர்சி வழக்கின் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், நஜிப்பிற்கு பேரரசர் அரச பொது மன்னிப்பு வழங்கக் கூடாதென 35,000 இணையள பயனர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நஜிப்பிற்கு பேரரசர் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென அவரின் ஆதரவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து, பெர்சே இயக்கம் இந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர், அம்னோ ஆதரவாளர்களைக் கொண்ட கும்பல் ஒன்று இஸ்தானா நெகாராவுக்கு முன் கூடி, நஜிப்பிற்கு பேரரசர் மன்னிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. பெக்கான் எம்பியான நஜிப் தமக்கு அளிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையைத் தற்போது காஜாங் சிறைச்சாலையில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்.



