
எஸ்ஆர்சி நிதி முறைகேட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நஜிப் ரசாக் 14 நாள்களுக்குப் பெக்கான் எம்பியாக இருப்பார் என்றும் இந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பொது மன்னிப்பு கிடைக்கவில்லை என்றால், பெக்கான் தொகுதி எம்பி பதவியை அவர் இழப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அத்தொகுதி காலியானால் அதற்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. பொதுத்தேர்தல் விரைவில் நடத்தப்பட இருப்பதால், ஈராண்டுக்குள் அப்படியொரு இடைத் தேர்தல் தேவையில்லை என்று சட்டத்துறை அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar (வான் ஜுனைடி துவாங்கு ஜாபார்) தெரிவித்தார். 14 நாள்களுக்குப் பின்னர் நாடாளுமன்றம் அத்தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும். நஜிப்பிற்கு பேரரசர் பொது மன்னிப்பு வழங்கினால், 15ஆவது பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட முடியும். அது கிடைக்கவில்லை என்றால், நஜிப் 12 ஆண்டுகளைச் சிறையில்தான் கழிக்க வேண்டிவரும் என்று அவர் தெரிவித்தார்.



