9 மாதக் குழந்தையை Bukit Tengah (புக்கிட் தெங்கா) பராமரிப்பாளர் வீட்டிலிருந்து கடத்திய இரு இளம் வயதினர் உட்பட ஐவரை, இரு வெவ்வேறு இடங்களில் போலீசார் கைது செய்தனர்.
குழந்தையின் தாயார் அதனைப் பெற பராமரிப்பாளர் வீட்டுக்குச் சென்றபோது, அவரின் 14 வயது பேத்தி குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கேள்விப்பட்டு புகார் அளித்துள்ளார்.
துரிதமாகச் செயல்பட்ட போலீசார் பராமரிப்பாளரின் பேத்தி உட்பட மூன்று இளம் வயதினரை Machang Bubok (மாச்சாங் பூபோக்) கில் கைது செய்த பின்னர், கூலிமில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றினர். அதனை சட்டவிரோதமாக வைத்திருந்த 43 வயது மாதுவையும் அவரது 30 வயது கணவரையும் கைது செய்தனர்.
குற்றவியல் சட்டம், பிரிவு 363இன் கீழ் இது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.