
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க அம்னோ தலைவர்கள் பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்று பிரதமர் இஸ்மாயில் சப்ரியை நெருக்கி வருக்கின்றனர். நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளதால், அது அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் பெரும் பாதகத்தையும் பொது மக்களின் நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளது.
மேலும், கட்சித் தலைவர் ஸாஹிட் ஹமிடி பல ஊழல் வழக்குகளைச் சந்தித்து வருவதால், அவருக்கும் தண்டனை உண்டு எனும் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்தலின் மூலம் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவர் அலைவதாலும் கட்சியின் பிரச்சார பீரங்கியான நஜிப் சிறையில் இருப்பதாலும், அம்னோவை நம்பி வாக்களிக்கும் பொதுமக்களின் ஆதரவு குறையும் என்று கணிக்கப்படுகிறது.
எனவே, பொதுத்தேர்தலை ஸாஹிட் ஹமிடி மேலும் மேலும் வலியுறுத்தினால், அது அவருக்கே கேடாக முடியும் என்று எச்சரிக்கப்படுகிறது.



