
கூச்சிங்கில் 1,035 கோடி ரிங்கிட்டிலான பல மேம்பாட்டுத் திட்டங்கள் மந்தகதியில் நடப்பதாகவும் அதில் சில திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சரவாக் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் Abun Sui (அபுன் சுய்) குறிப்பிட்டுள்ளார்.
Belaga, Long Busang (பெலாகா, லோங் புசாங்) கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மருத்துவமனைத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.
இதே போன்று, இம்மாநிலத்தில் 1,035 கோடி ரிங்கிட் மதிப்பிலான அரசு கிளினிக்குகள், பள்ளிகள், ஆசிரியர் விடுதிகள், கிராமப்புற சாலகள், பாலங்கள், பான் போர்னியோ நெடுஞ்சாலையின் சில பகுதிகளும் அடங்கும்.
இவை விசாரணை செய்யப்பட்டு அத்திட்டங்களில் அரசியல்வாதிகளின் பங்கு, அவர்களின் ஊழல், இதுவரை இத்திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதை மாநில அரசு அறிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



