
போர்க் கப்பலுக்கான உதிரிப் பாகங்களை விநியோகிக்க 210 மில்லியன் ரிங்கிட் துணை குத்தகையைப் பெற்ற அமைச்சர் Abdul Latiff Ahmad (அப்துல் லத்திப் அமாட்டின்) இரண்டாவது மனைவியின் நி’றுவனம், காது குடையும் பஞ்சு, கனிம நீர் விநியோகக் கணக்கைக் காட்டி, அரசின் பணத்தைக் கொள்ளையிட்டதாக ரபிஸி ரம்லி குற்றம் சாட்டினார்.
போஸ்டெட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டுள்ளதாக ரபிஸி சுட்டிக்காட்டி, இது மோசமான நடவடிக்கை என்றும் கப்பல் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட பணம் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப் பட்டதற்கு இது ஒரு சான்று என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் அப்துல் லத்திப்பின் இரண்டாவது மனைவியின் Alizes Marine (அலிஸெஸ் மெரின்) நிறுவனமே இந்த மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் என்றும், இதற்கு மாண்புமிகு அமைச்சரின் பதில் என்னவென ரபிஸி கேள்வி எழுப்பியுள்ளார்.



