
நாட்டில் அனைத்துலகக் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் தவறினால், நாடு முழுமையிலும் போராட்டம் வெடிக்கும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் Ahmad Fadzil Shaari (அமாட் ஃபாடில் ஷாரி) எச்சரித்துள்ளார்.
அம்மாதிரியான கலைநிகழ்ச்சிகள் முஸ்லிம் பாரம்பரியத்திற்கு ஒவ்வாதது என்றும் அது மேற்கத்திய கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் இருப்பதால் நமது சூழ்நிலைக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
பாசிர் மாஸ் எம்பியான ஃபாடில், அண்மையில் கூட அமெரிக்க பாடகர் Bille Ellis (பில்லி எல்லிஷ்) நடத்திய கலைநிகழ்ச்சியைக் கடுமையாக எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியவராவார்.



